Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆளணி வளம் குறைவாக இருந்தாலும், பௌதீக வளம் பற்றாக்குறையாக இருந்தாலும் மக்களுக்கான சேவையை வழங்குவதில் எந்தவொரு குறைபாடும் இருக்கக் கூடாது-ஆளுநர்.

எம்மிடமுள்ள வளங்களை ஒன்றுதிரட்டி அதி உச்ச சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும்

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று  (15) நடைபெற்றது. 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஆளணி வளம் குறைவாக இருந்தாலும், பௌதீக வளம் பற்றாக்குறையாக இருந்தாலும் மக்களுக்கான சேவையை வழங்குவதில் எந்தவொரு குறைபாடும் இருக்கக் கூடாது.

எம்மிடமுள்ள வளங்களை ஒன்றுதிரட்டி அதி உச்ச சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் இதை உறுதிப்படுத்த வேண்டியது திணைக்களத் தலைவர்களின் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார். 

சுகாதார திணைக்களம், சுதேச மருத்துவ திணைக்களம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களம் ஆகிய ஒவ்வொரு திணைக்களங்களினதும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டன. 

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள பிரதி ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.