Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி,

,

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்து உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பில்லர் ரொக் மற்றும் ஹெஸெல்டென் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வீடு தீ விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பெண் வீட்டில் மற்றுமொருவர் இருப்பதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் சென்று தேடிய போது நபர் ஒருவர் இருப்பதனை அவதானித்து உள்ளனர்.

எனினும் குறித்த நபர் தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.