Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

வெறிச்சோடி கிடக்கிறது மேங்கர் சதுக்கம் ; காசாவில் ஓயாத போரால் பெத்லகேமில் 2ம் ஆண்டாக களையிழந்த கிறிஸ்துமஸ்!

.

மணியோசைக்கு பதில் குண்டுகளின் சத்தம்தான் கேட்கிறது’- வெறிச்சோடிக் காணப்படும் இயேசு பிறந்த பெத்லகேம்.

காசாவில் ஓயாத போரால் தொடர்ந்து 2வது ஆண்டாக பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் யாருமின்றி மேங்கர் சதுக்கம் வெறிச்சோடி காணப்படுகிறது. இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகமே தயார் நிலையில் உள்ளது.

ஆனால், பெத்லகேம் மட்டும் எந்த கொண்டாட்டத்திற்கான அறிகுறியின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடக்கும் போரால் கடந்த ஆண்டே பெத்லகேமுக்கு எந்த சுற்றுலா பயணிகளும் வரவில்லை.

இதனால் கடந்த ஆண்டே பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. ஆனால் அடுத்த ஆண்டாவது தங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என காத்திருந்த பாலஸ்தீன மக்களின் எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை.

காசா போர் 15 மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதால் இந்த ஆண்டும் பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏதுவுமின்றி களையிழந்து காணப்படுகிறது. இங்குள்ள மேங்கர் சதுக்கத்தில் பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படவில்லை.

நினைவுப் பரிசுகள், பாரம்பரிய கைவினைப் பொருட்களை வாங்க ஆளில்லை. சதுக்கத்தை சுற்றி உள்ள கடைகள் காற்று வாங்குகின்றன.

கொரோனாவுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெத்லகேமுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் உலகின் பல இடங்களில் இருந்து வருவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளனர். இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என அங்குள்ள மக்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.

பெத்லகேம் நகரில் 5,500 ஓட்டல்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்துமே காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் கூறி உள்ளனர். ஓட்டல்களில் தங்குபவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகி விட்டது.

* பாலஸ்தீனர்கள் வெளியேற கூடாது

நேட்டிவிட்டி தேவாலய பாதிரியார் இசா தால்ஜி கூறுகையில், ‘‘இங்கு பல குடும்பங்கள் நிதி ரீதியாக சிரமப்படுகின்றனர்.

வாடகை, பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. யாருக்கும் வருமானம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்துமஸ் பரிசுகளை வாங்குவது அல்லது விடுமுறையை கொண்டாடுவது மிகவும் குறைவு.

அவர்களுக்கு தேவாலயம் சார்பில் நாங்கள் உதவுகிறோம். ஆனாலும், தேவைகள் நிறைய உள்ளன. பலர் பெத்லகேமை விட்டு வெளியேறிவிட்டனர்.

இப்படிப்பட்ட சவால்கள் இருந்த போதிலும், பாலஸ்தீனர்கள் தொடர்ந்து பெத்லகேமில் வசிப்பதை ஊக்குவிப்பதே இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தின செய்தியாக வைக்க விரும்புகிறோம்.

இயேசு பிறந்த போது இருள் மறைந்து ஒளி பிறந்தது. எனவே நாம் காத்திருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நம் வேர்களுடன் நாம் இருக்க வேண்டும். நம் வேர்கள் பெத்லகேமில் உள்ளன’’ என்றார்.