சஜித் பிமேதாசவுடன் எந்தத் தொடர்பும் இல்லை
.
சஜித் பிமேதாசவுடன் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பளாரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது நாமல் ராஜபக்ஷ கூறுகையில்,
கட்சியென்ற வகையில் தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாங்கள் சவால் நிறைந்த தேர்தலை வெற்றிபெறச் செய்ய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். கிராமிய மக்களை எங்களால் காட்டிக்கொடுக்க முடியாது. இதன்படி கட்சியின் அரசியல் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. எமது கொள்கை அடிப்படையில் மகிந்த சிந்தனையுடன் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எனது தந்தைக்கு டீல் இருப்பதாக கூறினர். இப்போது நான் சஜித் பிரேமதாசவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு மக்களுடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல் உள்ளது. அரசியல் அவதானத்தை வேறு திசைக்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கின்றர். ஆனால் எங்களுடன் எதிர்க்கட்சியுடன் கொடுக்கல்வாங்கல் இல்லை. மக்களுடன் மட்டுமே தொடர்பு உள்ளது. இதனபடி நாங்கள் 7ஆம் திகதி எங்களின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அறிவிப்போம்.