Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஷேக் ஹசீனா எங்கே? – கைவிரித்த வங்காளதேச இடைக்கால அரசு

.

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பதவியை ராஜினாமா செய்து விட்டு, டாக்காவில் இருந்து சகோதரியுடன் ஹசீனா வெளியேறினார்.

இந்தியாவில் தஞ்சமடைந்த அவர், சில நாட்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், உள்நாட்டு போராட்டங்களால் பதவியில் இருந்து விலகி, நாட்டை விட்டு தப்பிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் தொஹித் ஹொசைன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா குறித்து இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீர அரசிடம் கேட்டதாகவும், உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.