தவெக தலைவர் விஜயை ஆளுநர் ஆட்சியமைக்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை!
தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல் பரவியது.
ஆட்சி அமைக்க உரிமை வழங்குமாறு விஜய் அளித்த கோரிக்கையில் "ஆளுநர் அர்லேக்கர்" திருப்தி இல்லை என தகவல் கிடைத்துள்ளது.
118 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாகவும் அவர்களின் ஆதரவு கடிதத்தை விஜய் அளிக்கவில்லை எனவும் ஆளுநர் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் உண்மையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என சில அரசியல் ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜயை ஆளுநர் ஆட்சியமைக்க இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை, இதனால் நாளை விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்பது சந்தேகமே என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு ஏற்றார்போல் இரு கட்சிகளும் தனித்தனியாக நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தின. இந்த தகவலுக்கு 2 கட்சிகளும் மறுப்பு தெரிவிக்காததால், இந்த தகவல் உண்மை என்றே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தனிப்பெரும் கட்சியான த.வெ.க ஆட்சியமைக்க தி.மு.க இடையூறு செய்யாது. விஜய் ஆட்சிக்கு ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தொடர்ந்து கவனிப்போம். தி.மு.க அரசின் திட்டங்களை த.வெ.க தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம்; தி.மு.க அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000-வது வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தருவதாக விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அது சந்தேகம்தான்.. ஆனால் அதைச் செய்தால் மகிழ்ச்சி. உடனடியாக தேர்தல் வருவதை தி.மு.க விரும்பவில்லை. அரசமைப்பு குழப்பம் ஏற்படுவதையும் தி.மு.க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


