Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நீதிக்கான பெருங்குரல்: நம் சகோதரன் 'குட்டி'யின் இழப்பிற்கு நீதி கேட்டு கண்டன அமைதிப் பேரணி!

பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தமது துக்கத்தையும், அமைதியான வழியிலான அறப்போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

நீதிக்கான பெருங்குரல்: நம் சகோதரன் 'குட்டி'யின் இழப்பிற்கு நீதி கேட்டு கண்டன அமைதிப் பேரணி!

அதிகாரத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நம் தொப்புள்கொடி உறவான திரு. வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (என்கிற) குட்டி பலியாகியிருப்பது நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு காவல் துறையின் இந்த ஈவிரக்கமற்ற செயலுக்குப் பின்னால் உறைந்துபோயிருக்கிறது ஒரு குடும்பத்தின் கண்ணீரும், நம் சமூகத்தின் ஆற்றாமையும். இது ஒரு தனிமனிதனுக்கான இழப்பு மட்டுமல்ல; நம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அநீதி.

நெஞ்சில் ஈரமும் தார்மீகக் கோபமும் கொண்ட நீதிக்காகக் காத்திருக்கும் மக்கள்  நீதிகேட்டு வீதிக்கு வந்து  கண்டன அமைதிப் பேரணி  ஒன்றை  14 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை)  பொபினி நகரசபை (Bobigny Mairie)  முன்றலிலிருந்து  பொபினி காவல் நிலையம் (Bobigny Police Station) வரை நடத்தியிருந்தனர்.  பேரணியில் கலந்துகொண்ட  அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தமது துக்கத்தையும், அமைதியான வழியிலான அறப்போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.   

- காணொளி : https://youtu.be/U7Cm3MsllL0

- நீதிக்காகக் காத்திருக்கும் உறவுகள்.