Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வேலணை வங்களாவடி நகரில் சுற்றுவட்டம் - உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

.

வேலணை வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்  - உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப் படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (20) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமயில் நடைபெற்றது.

இதன்போது சுற்றுவட்டத்தின் அவசியதேவை கருதி முன்மொழிவொன்றை சமர்ப்பித்து உரையாற்றிய அனுசியா ஜெயகாந்த் மேலும் கூறுகையில் -
வங்களாவடி நகரின் மையத்தில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பதை சிலர் விரும்பாதிருக்கலாம்.  அதற்காக கனரக வாகனங்களை கொண்டுசெல்வது கடினம் என்றும் இட அமைவு போதாதென்றும் சாட்டுப் போக்கை கூறி சுற்றுவட்டம் அமைக்கப்ப்படுவதை தடுக்கவும் முற்படலாம்.

ஆனால் இதில் அரசியலையோ தனிநபர் விருப்பு வெறுப்பையோ  கொண்டுவருவது அவசியமற்றது. இதேநேரம்  இந்த சுற்றுவட்டம் என்பது பிரதேசத்தின் அழகையும் அடையாளத்தையும் உறுதி செய்வதுடன் வீதிச் சட்ட ஒழுங்கை நடைமுறைப் படுத்துவதை உறுதி செய்வதுடன் விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்கும் ஒரு செயற்பாடாகவும் இருக்கும்.
இதேவேளை இந்த வீதியின் மையத்தில் ஏற்கனவே ஒரு சுற்றுவட்டம் இருந்தது. ஆனால் இன்று வீதி அகலிக்கப்பட்டுள்ளது, கடைத் தொகுதிகளும் பெரியளவில் கட்டப்பட்டு செயற்படுகின்றன. அதேபோன்று இருக்கின்ற இட அமைவுக்கேற்ப வீதியின் நடுவே ஒரு குறியீட்டு ரீதியிலான சுற்றுவட்டத்தை நவீன தொழில்நுட்பரீதியான பொறிமுறையை வகுத்து இந்த சுற்துவட்டத்தை அமைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

குறித்த முன்மொழிவை வரவேற்ற சபையின் உறுப்பினர்கள், இச்சுற்றுவட்டத்தின் அவசியம் கருதி துறைசார் தரப்பினரின் ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இன்நிலையில் குறித்த விடையம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என தவிசாளர் சி.சோக்குமார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.