Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்: அரசாங்கம், ஐ.நா புள்ளிவிபரங்களுக்கு இடையே முரண்!

பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பாக யுனிசெப்பின் புள்ளிவிவரங்களுக்கும் கல்வி அமைச்சிக்கும் இடையே இலட்சக்கணக்கான வித்தியாசம்!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 600க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் இல்லை எனக் கூறும் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம், இது தொடர்பாக அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் அளித்த புள்ளிவிபரங்களுக்கு இடையே இலட்சக்கணக்கான வித்தியாசம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

“இந்தப் பேரழிவு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிறது. ஏற்கனவே துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். எத்தனை ஆசிரியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்? அல்லது எத்தனை சிறுவர்கள்? இது இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது. இன்னும் இறுதி எண்ணிக்கை இல்லை,” என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பாக யுனிசெப்பின் புள்ளிவிவரங்களுக்கும் கல்வி அமைச்சிக்கும் இடையே இலட்சக்கணக்கான வித்தியாசம் இருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

"இந்த சம்பவம் நடந்தவுடன், இலங்கையில் 275,000 சிறுவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்தது. இருப்பினும், கல்வி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு சுமார் 100,000 சிறுவர்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்."

பேரழிவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் மக்களில் 275,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருப்பதாக டிசம்பர் தொடக்கத்தில் எச்சரித்த இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியது.

கல்வி அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் சுரக்சா காப்புறுதித் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதை விளக்குமாறு மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

"எவ்வாறெனினும், கல்வி அமைச்சின் தரப்பை எடுத்துக் கொண்டால், இப்போது இந்த சிறுவர்களின் தரப்பிலிருந்து, ஜனாதிபதி நிதியிலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது மொத்தத் தொகை அதுதான். சிறுவர்களுக்கு ஒரு சுரக்சா காப்புறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். கல்வி அமைச்சின் கீழ் தான் சுரக்சா காப்புறுதி செயல்படுத்தப்படுகிறது. இப்போது, சுரக்சா காப்புறுதியின் ஊடாக இந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து இதுவரை எந்த தெளிவுபடுத்தலும் இல்லை."

சண்.பார்த்தீபன்