Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம்

.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 8 மணி முதல் புத்துார் சோமஸ்கந்தா பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்துப் பொலிசார் மிகக் கேவலமான முறையில் வாகனச் சாரதிகளை அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றதாக விசம் வெளியிடப்பட்டுள்ளது.

புத்துார் சந்திக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில் உள்ள ஒற்றைக் கோட்டைத் தாண்டி வருவதாக கூறி நீதிமன்ற நடவடிக்கை என சாரதிகளை அச்சுறுத்தி ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையாக பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டத்தரணிகளே 5 ஆயிரம் வாங்குவாங்கள்

இந்நிலையில் கோட்டைத் தாண்டாமல் வந்த வாகனங்களைக் கூட வழி மறித்து ஒற்றைக் கோட்டை தாண்டி வருவதாகக் கூறி வழக்குப் பதியப் போவதாக அச்சுறுத்தி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதோடு நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதாக அச்சுறுத்தி அங்கு போனால் சட்டத்தரணிகளே உங்களிடம் 5 ஆயிரம் வாங்குவாங்கள்.

அ்த்துடன் தண்டனைப் பணம் 7500 கட்ட வேண்டும். மேலும் மல்லாகம் நீதிமன்றத்தில் வந்து ஒரு நாள் முழுவதும் நிற்க வேண்டும் என கூறி ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையான பணத்தைப் பெற்று வருகின்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளீன் ஸ்ரீலங்காவின் சிறப்பான வேலை!