Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போர் வெற்றியல்ல, மனித குலத்தின் தோல்வி வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம்.

ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம்

போர் வெற்றியல்ல, மனித குலத்தின் தோல்வி வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம்.

போர் என்பது வெற்றியல்ல அது நாட்டினதும் அல்லது மனித குலத்தினதும் தோல்வியாகும். 30 வருட கால யுத்தம் இழப்புக்களை மாத்திரமே மிகுதியாக்கியுள்ளது. வெறுப்புக்கு பதிலாக அன்பை வெளிப்படுத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்து 18 ஆம் திகதி சனிக்கிழமையுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு விசேட ஊடக அறிக்கையை வெளிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும்  தெரிவித்துள்ளதாவது,

போர் என்பது வெற்றியல்ல,அது நாடு அல்லது மனித குலத்துக்கு பாரிய தோல்வியாகும்..30 வருடகால இனபோராட்டம் காரணமாக நாடு பலவற்றை இழந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாய்மார் தங்களின் பிள்ளைகளை இழந்தனர்.அதேபோல் பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்தனர்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என இன அடிப்படையில் நாம் பிளவடைந்துள்ளோம். இந்த யுத்தத்தின் காரணமாக நான் எனது கண்ணை இழந்தேன்.மேலும் பல இழப்புக்களை எதிர்க்கொண்டேன். இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம்.

பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிக்கவும்,மனங்களில் பிசாசுகளுக்கு பதிலாக  கடவுளை நிலைப்படுத்தவும் ஒருவருக்கொருவர் ஆறுதலை பரிமாற்றிக் கொள்ளவும் இன்றை தினத்தில் உறுதியளிப்போம்.