Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவு… திரைப்பிரபலங்கள் சோகம்

.

“நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.

அவரது மறைவை தொடர்ந்து இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷ் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குநர் லிங்குசாமி மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு ‘ஆனந்தம்’ படத்தின் போது டெல்லி கணேஷ் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

டெல்லி கணேஷ் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று இயக்குநர் ரமணா தெரிவித்தார். டெல்லி கணேஷ் இழப்பு குறித்த செய்தி அதிகாலையில் பேரிடியாய் வந்தது.

மகனை பெரிய ஹீரோவாக பார்க்க ஆசைபட்டார் என்று பிரமிட் நடராஜன் கூறினார். தன்னோட கடைசி நாள் வரை நடிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தாரு.. என டெல்லி கணேஷ் குறித்து நடிகர் சுவாமிநாதன் கூறினார்.

அவர் இருக்குற இடம் எப்பவுமே கலகலப்பா இருக்கும். இன்னைக்கிதான் அமைதியா இருக்கு என்று நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

மேலும் மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, சந்தான பாரதி மற்றும் ராதா ரவி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, டெல்லி கணேஷ் மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.