Breaking News
ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றும் உணவகத்தில் பணியாற்றும் வீராங்கனை –
.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.
18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது