Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

லொஸ் ஏஞ்சல்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீயால் 30,000 பேர் வெளியேற்றம்!

.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் 30,000 பேர் வெளியேறியுள்ளனர்.

கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டயர்) நிலப்பரப்பு தீயினால் எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீப்பிடித்து எரிந்த  வீடுகள்

 

நீண்ட வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து வீசும் பலத்த காற்றினால் தீ பரவி வருவதால் ஆபத்து அதிகரித்திருப்பதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோபாங்கா கனியன் மலைகளில் இருந்து மக்கள் வெளியேறியபோது, தீ அங்கிருந்து பசிபிக் பெருங்கடலுக்கு பரவியதால், ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.காட்டுத்தீ தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவிக்கையில்,

ஒருவருக்கும் காயம் ஏற்படாததால் இந்த கட்டத்தில் நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். 10,000 வீடுகளில் 25,000 க்கும் அதிகமான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.விமானத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் இருந்து தண்ணீரை எடுத்து அருகில் உள்ள காட்டுத் தீயை அணைத்தனர்.

தீப்பிழம்புகள் வீடுகளை சூழ்ந்த நிலையில் புல்டோசர்களினால் கைவிடப்பட்ட வாகனங்களை வீதிகளில் இருந்து அகற்றப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.