எழுதுவினைஞரை முத்தமிட்ட மனிதவள முகாமையாளர்: 750,000 ரூபாய் நட்டஈடு, 7 வருட கடூழியச் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு
.
குறித்த மனிதவள முகாமையாளர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி, குறித்த நபரால் பாதிக்கப்பட்ட எழுதுவினைஞக்கு 750,000 ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மேல்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இழப்பீடு வழங்க தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைதண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விசாரணையின் பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தார்.
அதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.