Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஊடகங்களைக்கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை!

.

ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திடம் இல்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இடம்பெற்ற இலங்கை ஒளிபரப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இக் குறித்த சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை அமைச்சரிடம் முன்வைக்கவும், பல கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும் இக் கூட்டம் கூட்டப்பட்டது.

இக் கூட்டத்தின் போது, தற்போது இயற்றப்பட்ட மற்றும் செயல்பாட்டுச் சட்டங்களில் உள்ள சில குறைபாடுகள் தொடர்பாக அமைச்சர் இலங்கை ஒளிபரப்பாளர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

மேலும் , ஊடகங்களும் அரசாங்கமும் பரஸ்பர புரிதலுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் நலனுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனவும், ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு பயனற்ற மற்றும் செயலற்ற நிறுவனமாக செயற்பட்டு வந்த வெகுஜன ஊடக அமைச்சகம், அதன் சரியான இடத்தை மீட்டெடுப்பதில் தற்போதைய அரசாங்கம், முக்கிய கவனத்தை செலுத்துவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு உகந்த சூழலை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதன் மூலம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது ஆகும்.