Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்! கண்டுகொள்ளாத உலகம்!*

.

ஆக்கிரமிக்கப்பட்ட காசா (Gaza) பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான முறையில் இஸ்ரேல் (Israel) இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மேலும் தமது அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இதற்குரிய போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, சர்வதேச மன்னிப்பு சபை நேற்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்படும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலின் போது, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன், இனப்படுகொலை செயல்களை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை கூறியுள்ளது.இந்நிலையில், இந்த இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று மன்னிப்புசபை கோரியுள்ளது.

அதேநேரத்தில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான தங்கள் கடமையை மீறுகின்றன என்றும் மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் மீது செல்வாக்கு உள்ள அனைத்து நாடுகளும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற முக்கிய ஆயுத விநியோக நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஏனைய நாடுகள், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை உடனடி முடிவுக்கு கொண்டு செயல்பட வேண்டும் என்றும் மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பாக வடக்கு காசாவில் முற்றுகையிடப்பட்ட மக்கள் பட்டினி, இடப்பெயர்வு, இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகள் தடுக்கப்படுகின்ற செயல்கள் என்பவற்றை எதிர்கொண்டுள்ளனர் என்றும் சர்வதேச மன்னிப்புசபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.