தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் அவர்களின் வித்துடலானது பிரான்சில் விதைக்கப்பட்டது.
விநாயகம் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்றைய தினம் (20.06.2024) வியாழக்கிழமை, பிரான்சில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகம் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், முதுநிலைப் போராளியுமாகிய விநாயகம் - கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்கள் கடந்த 04.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக பிரான்சு தேசத்தில் சாவடைந்தார்.
தமிழீழ தேச மக்களின் மனதில் இடம் பிடித்து நிலைத்துவிட்ட இவருக்கு பெரும் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இறுதி வணக்கம் செலுத்தினர். காலை 10.00 மணிமுதல் பகல் 15.00 மணிவரை Espace Venise 30 Rte de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் இவரின் புகழுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள், விடுதலைப்புலிகளின் பல கட்டமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கல் செய்திகளையும் தெரிவித்திருந்தனர்.
விநாயகம் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்ட பின்னர், மாலை 17.00 மணியளவில் வித்துடலானது Cimetiére Parisien de Pantin 164 Av. Jean jaurés 93500 Pantin என்னும் முகவரியில் விதைக்கப்பட்டது.