ஜேவிபி கூட்டத்தை உளவு பார்க்க வந்த நபர்கள்: பொலிஸார் தீவிர விசாரணை
.
சந்தேகநபர்கள் இருவரும் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் போலியானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கடந்த முதலாம் திகதி பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடலொன்று கடந்த 30ஆம் திகதி முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.
கலந்துரையாடல் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இனந்தெரியாத இருவர் நீண்ட நேரமாக நடமாடி வந்துள்ளனர்.
இவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த ஓய்வு பெற்ற பொலிஸார் அவர்களை சோதனை செய்ய முயன்ற போது தப்பி ஓடியுள்ளனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் தாக்குதல் நடத்தும் நோக்கில் அல்லது உளவு பார்க்கும் நோக்கில் இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.