போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை?: பிரித்தானிய நாடாளுமன்றில் உமா குமாரன் கேள்வி
.
இலங்கை, மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியாவிற்கு முக்கியத்துவம் வழங்கும் நாடாக இருக்கிறது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை முன்னேற்ற வேண்டும் என்ற தங்களின் இலக்கை அடைவதற்கு மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறதா என்று தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார செயலாளர் கெதரின் வெஸ்ட்,
இலங்கை, மனித உரிமைகள் விடயத்தில் பிரித்தானியாவிற்கு முக்கியத்துவம் வழங்கும் நாடாக இருக்கிறது.
பிரித்தானியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில், பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதன் ஊடாக ஒருநாட்டின் மனித உரிமைகள் உள்ளிட்ட நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படுமாக இருந்தால் அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும்” என்றார்.
ஆனால் எதிர்காலத்தில் இலங்கையர்களில் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக பொருளாதாரத் தடையைப் பயன்படுத்த முடியுமா என்ற அனுமானத்தின் அடிப்படையில் பதில்களை வழங்க முடியாது என்றும் அவ்வாறு செய்வதால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.