Breaking News
நுவரெலியாவில் அதிகாலையில் நடந்த கோர விபத்து: 25 பேர் படுகாயம், போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு
.
நுவரெலியா, டொப்பாஸ் லபுக்கலை பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக கண்டி-நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.