225 எம்.பி.க்களில் 155 எம்.பி.க்கள் மக்களினால் நிராகரிக்கப்படுவார்கள் .
கோத்தபாய ராஜபக்ச ஆட்சியிலே இந்த நாட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகியதன் காரணமாக மக்கள் பாராளுமன்றத் தேர்தலை விரும்புகின்றார்கள்.
பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் 155 எம்.பி.க்கள் தோற்பார்கள்.
கிண்ணியாவில் அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும். மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது .இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலை விரும்புகின்றது போன்று ஜே.வி.பி.. தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலை விரும்புகின்றார்கள்.
ஆனால் பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோருகின்றது .அதேபோன்று நாட்டினுடைய பெரும்பான்மை மக்கள் பாராளுமன்றத் தேர்தலை எதிர்பார்க்கின்றார்கள் .
கோத்தபாய ராஜபக்ச ஆட்சியிலே இந்த நாட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகியதன் காரணமாக மக்கள் பாராளுமன்றத் தேர்தலை விரும்புகின்றார்கள்.பாராளுமன்றத்தேர்தல் நடத்தப்பட்டால் 225எம்.பி.க்களில் 155 எம்.பி.க்கள் மக்களினால் நிராகரிக்கப்படுவார்கள் . இது இந்த நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பு.
மக்கள் எதிர்பார்க்கின்ற பாராளுமன்றத் தேர்தலை நடத்துகின்ற போது ஐக்கிய மக்கள் சக்தியும் ஜே.வி.பி.யும் நினைக்கின்றவாறு அவர்கள் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. இது கடந்த கால தேர்தல்களின் வரலாறு.
ஜனாதிபதி ஜூன் மாதத்தில் தான் பொதுத் தேர்தல் தொடர்பாக பேசுவேன் என கூறுகின்றார் ஆனால் மே மாதத்துக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஒழிய பாராளுமன்றத் தேர்தல் நடக்க முடியாது ஏனென்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி க்கும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தால் ஆகஸ்ட் மாதத்திலே அந்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வேட்பு மனு இறுதி நாள் தொடர்பாக வெளிப்படுத்த வேண்டும். பாராளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதத்துக்குள் நடத்தியாக வேண்டும் செப்டம்பரில் நடத்த முடியாது.
ஆகவே ஜனாதிபதியின் கூற்றில்பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஜூன் மாதத்தில் சொல்வேன் என்பது ஏமாற்று விடயம் என்றார்.