Breaking News
துபாய் சென்றார் பஷில் ராஜபக்ஷ
.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை (09/20) காலை பயணமாகியுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார்.
பசில் ராஜபக்ஷ இந்த விமான சேவைக்காக 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Gold Route முனையத்தின் வசதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ துபாய் சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் எனவும் அவர் அமெரிக்கா செல்வதற்கு எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.