Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

146 நாடுகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும்.

பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும்.

அனைத்து நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் – ஐநா நிபுணர்கள் வேண்டுகோள்.

அனைத்து நாடுகளும் பாஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் 146 நாடுகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்காக நாடுகள் தங்கள் அரசியல் இராஜதந்திர வளங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது பாலஸ்தீன மக்களின் உரிமைகளை அவர்களின் போராட்டங்களை சுதந்திரம் விடுதலைக்கான அவர்களின் துயரங்களை அங்கீகரிப்பதாகும் என ஐநா நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.;

பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் பாலஸ்தீனத்திலும் மத்தியகிழக்கிலும் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கான முன்நிபந்தனை இதுவென ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.