Breaking News
தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரப் பயணம் யாழில் ஆரம்பம்
.
தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை 09 மணிக்கு ஆரம்பமானது.
இந்தப் பயணம் பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகர்ந்தது.
தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களுக்குமாக தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த பிரச்சாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும் எனவும் , வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரச்சாரப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.