Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போட்டி முடிந்ததும் அடக்கம் பண்ணிக்கலாம்.. இறந்த உடலுடன் மேட்ச் பார்த்த குடும்பம் – வீடியோ வைரல்!

.

 

சமூக வலைதள புகழுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை சந்திக்கும். பல வீடியோக்கள் வைரலாகும்.

அந்த வகையில் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

டொம்ம் வாலண்டினோ என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோ 18 விநாடிகளே ஓடுகிறது. வீடியோவில், இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து ப்ரொஜெக்டர் வைத்து பெரிய திரையில் சிலி மற்றும் பெரு அணிகள் இடையே நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து விளையாட்டு போட்டியை குடும்பத்தினர் பார்ப்பதை காணமுடிகிறது.

இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், “ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்” என அச்சிடப்பட்டுள்ளது.