Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குமுழமுனை கொட்டுக்கிணற்று பொங்கலுக்கு சென்ற தூக்குகாவடி தடம்புரண்டது!

,

முல்லைத்தீவு- குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திக்கடனுக்காக சென்ற தூக்குகாவடி கட்டப்பட்ட உழவு இயந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் உள்ள கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு திங்கட்கிழமை (14) இடம்பெற்ற நிலையில் குறித்த ஆலய தூக்குகாவடி நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பக பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் செல்ல இருந்த வேளை தூக்கு காவடி கட்டப்பட்ட உழவியந்திர பெட்டி கற்பக பிள்ளையார் ஆலய வளாகத்தில் திடீரென குடைசாய்ந்ததனால் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து தூக்கு காவடி எடுத்த இரு இளைஞர்களும் விபத்தில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.