Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல்!

த.தே.ம.முன்னனி அமைப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு!

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (09) முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம்  என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம்.

காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு  வருகை தநத காணியை ஆககிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் அவர்களது பெயரையும், வன்னிப் பாராளுடன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு  முன்னால் தெரிவித்திருந்தார்கள். அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன.

அந்தப்பகுதி போகஸ்வேவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம்.

அவர்கள் நேரடியாக போகஸ்வேவ பொலிஸ் நிலையம் ஊடாக இதனை அணுகுவவதற்காக இநத விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம்.

எமது நிலங்கை அரச திணைக்களளுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள். காண உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலஙகளில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.