பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு, விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு!
.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரையில் இலங்கை அரசியலின் பிரபுக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக “தினமிண” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்று முன்தினம் (21) பிற்பகல் 2.25 க்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்திய விமான சேவையில் ஏ.ஐ-272 விமான சேவையில் இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் (21) இரவு 11.15க்கு முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பங்கொக் நோக்கி எயார் ஏஷியா விமான சேவையில் எப்.டீ-141 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் வெளியேறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்சவின் மனைவி அவருடைய தந்தை திலகசிறி வீரசிங்க நேற்று (22) காலை 3.30க்கு டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே.-649 விமானத்தில் வெளியேறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் டுபாய் மூலம் அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக “தினமிண” செய்தி வெளியிட்டுள்ளது.