Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி - ஜனாதிபதி

.

2028ஆம் ஆண்டில் நாட்டின் அந்நிய செலாவணியை 15.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்ததாகவும் அதில் இரண்டாம் மீளாய்வில் இணங்கிய விடயங்களில் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உழைக்கும் போது அறிவிடப்படும் வரி ஒரு இலட்சம் என்ற வரையறை மூன்றாம் மீளாய்வின் போது ஒன்றரை இலட்சம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒன்றரை இலட்சம் மாதாந்தம் சம்பளம் பெறுவோருக்கு 100 வீதம் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2 இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 71 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டரை இலட்சம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு 61 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, 3 இலட்சம் சம்பளம் பெறும் ஒருவருக்கு 47 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

மூன்றரை இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 25.5 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கிணங்க, அதிக வருமானம் பெறும் ஒருவருக்கு குறைந்த நிவாரணமும் குறைந்த சம்பளத்தை பெறும் ஒருவருக்கு அதிக நிவாரணமும் கிடைக்கும் வகையில் உழைக்கும் போது அறவிடும் வரியில் திருத்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அத்துடன் தனிநபர் வருமான வரி முதலாம் கட்டம் 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உரிய திட்டத்தின் பிரகாரம் தனியார் வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதி வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தாமதம் இன்றி உர மானியத்தை வழங்குவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.