Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

"சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற கிளித்தட்டுப் போட்டிகள்"

,

"சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற கிளித்தட்டுப் போட்டிகள்"

"அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டித் தொடரில் கிளித்தட்டுப் போட்டிகள் இடம்பெற வேண்டுமென்ற யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தினரது கோரிக்கைக்கு அமைவாக  இடம்பெறும் இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள செயலக ஊழியர்கள் அனைவரும் போட்டிக்குகந்த நுட்பங்களை உணர்ந்து, முயற்சி, பயிற்சி மற்றும் மதிநுட்பத்துடன் வியூகமமைத்து கிராமியப் பாரம்பரியங்களை சமகாலத்திலும் பாதுகாத்து வருகின்றமை  மெச்சுதற்குரியது"
என அரச அதிபர் புகழாரம். 

சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டுக்கழக கிளித்தட்டுத் திடலில்  கடந்த சனிக்கிழமை [13]  சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ண கிளித்தட்டுப் போட்டிகளில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்   மருதலிங்கம் பிரதீபன்  இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத் தலைவர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் தாச்சிச் சங்க உறுப்பினர்கள்  மற்றும் பிரதேச செயலக மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில்  உடுவில் பிரதேச செயலக வீராங்கனைகள் முதலாமிடத்தையும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக வீராங்கனைகள் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.