Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

புங்குடுதீவு பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் – கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

.

புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் திருட்டு மாடுகளை இறைச்சிக்காக கொலை பண்ணுதல், கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரம் என்பன இடம்பெறுகின்றன.

இது குறித்து குறிகட்டுவானில் இயங்கும் உப பொலிஸ் நிலையத்திற்கு பலதடவைகள் முறைப்பாடு செய்தும், அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பொலிஸாருக்கும், குறித்த குற்றச் செயல்களை செய்பவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

கசிப்பு வியாபாரத்தினால் மாணவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. பிள்ளைகளை தனியே பாடாசாலைக்கு அனுப்புவதற்கு பயமாக உள்ளது.

பெண்கள் வீதியில் தனியாக நடமாடுவதற்கு பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. எனவே இதற்கு உரிய அதிகாரிகள் ஒரு சிறந்த தீர்வு வழங்கு வேண்டும் என்றனர்.