Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் கண்டுபிடிப்பு ! ; 40 மனித எச்சங்களுக்கு மேலும், ஏழு மனித எச்சங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது?

மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வு ஏழாம் நாள்; 43 எலும்புக்கூட்டு தொகுதிகள்! த.வி.பு ஓ-3035 தகட்டிலக்கம் மீட்பு.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்; த.வி.பு ஓ-3035 தகட்டிலக்கம் மீட்பு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மூன்று மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஏழாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மூன்று சடலங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார் உள்ளிட்டோரின் பங்குபற்றுதல்களுடன் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

மூன்றாம் நாளாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அவர்கள் அகழ்வு பணிகளை கண்காணித்தார்.

குறித்த அகழ்வு பணியின் போது ஏழு மனித எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 43 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்த எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து பற்கள் பிரித்து எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.