Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது!

,

வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின்  சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம்  தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  

வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டில் வேலை செய்யும்  இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் போது,  இருவரும் வெளிநாட்டு பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையிட்டதாகவும், அந்த பணத்தினை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வங்கியொன்றில் வெளிநாட்டு பணங்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றியதாகவும் கூறியுள்ளனர். 

இதனை தொடர்ந்து,  திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து வசிக்கும் இவர் பணத்தை வங்கியில் போடாமல் பெருந்தொகை பணத்தை வீட்டில் வைத்திருந்தார் என்றால் இவர் என்ன type ஆன மனிதர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை