Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

.

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதோடு, அதன் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாகவும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் என்னைக் குறிவைத்து, என்னைப் பற்றி தீங்கிழைக்கும் மற்றும் முற்றிலும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உத்தியோகபூர்வ புகார் அளித்துள்ளேன்.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயற்பாடுகளால் பெண்களை அரசியலில் இருந்து அகற்ற முயல்கிறார்கள் எனின், இன்னும் கடினமாக முயற்சி செய்யுங்கள் என நாங்கள் அவர்களுக்குச் சொல்கிறோம்.

கூட்டு இயக்கத்தால் பிறந்த அரசை இப்படிப்பட்ட தோல்வியுற்ற தந்திரங்களால் கவிழ்க்க நினைத்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்யுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.