Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

'இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பு!

,

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும். 2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

'இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை. எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.' என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார். நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில், அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது? நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.