Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி தொடர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால் தான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியை முன்கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்ல முடியும்.

கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் நாடு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருந்தது. அப்போது எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத நிலையில் தற்துணிவுடன் பொறுப்பேற்று நாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பச் சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

அதனால் அவரது வெற்றி இம்முறை நாட்டுக்கு அவசியமாகின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர் நாட்டு மக்களும் அவரை வெற்றியடையச் செய்ய அணிதிரண்டு வாக்களித்து வருகின்றனர் என்றார்.