பொருளாதாரப் பிரச்சினைக்கு ரணிலே காரணம் – சாித்த ஹேரத் குற்றச்சாட்டு!
.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொருளாதாரப் பிரச்சினையின் பங்குதாரர் தான் என நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் சாித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளாா்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
இம்முறை ஜனாதிபதி தேர்தல் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களை விட மிக முக்கியமானதாகும்.
நாட்டைக் காப்பாற்றினேன் என்று பொய்களை சமூகமயப்படுத்தும் போக்கை ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார்.
பொருளாதார மீட்சி தொடர்பான பொய்யான விடயங்களை சமூகத்துக்கு காண்பிக்கிறார். அவர் மீட்சியாளர் அல்ல. அவரும் இந்த பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் தான்.
வேறுயாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. அதனால் நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என கூறுவது முற்றிலும் பிழையான கருத்தாகும். நிபந்தனைகளுடன் சஜித் கடிதம் அனுப்பினார். அதை பொருட்படுத்தவில்லை. சரத் பொன்சேகா தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
அதற்கும் கடந்த அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. அவர்களாக கொடுத்த பதவியை தானாக ஏற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கவிடம் எந்த தீர்வும் இல்லை. தீர்வுகளுக்கு அவர் பதிலாக அமையவில்லை.
பிரச்சினையின் பங்குதாரர் தான் ரணிலும். பொருளாதார மீட்சி தொடர்பாக அவர் பொய்யான தோற்றப்பாடுகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறார். பொருளாதார வளர்ச்சி என்பது வெறுமனே இலக்கங்களை கொண்ட ஒன்றல்ல.
அது மக்கள் சார்ந்ததுமாகும். பொருளாதார வளர்ச்சி காணப்படுமாக இருந்தால் அது மக்களிலும் பிரதிபலிக்கும். ஒட்டுமொத்த மக்களையும் இலக்காக கொண்ட பொருளாதார வளர்ச்சியையே சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி முன்னெடுத்துள்ளது” என பேராசிாியா் சாித்த ஹேரத் மேலும் தொிவித்தாா்.