Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

டி20 உலகக்கோப்பை: மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பேரணி

.

உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி.

டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இன்று தாயகம் திரும்பியது. இந்தியா வந்ததும் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த இந்திய வீரர்கள் மும்பையில் தற்போது வெற்றிப் பேரணியை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களை வரவேற்க மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதி மற்றும் வான்கடே மைதானத்தில் பெருமளவிலான ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாது திரண்டுள்ளனர்.

 

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படாஸில் இருந்து இந்தியா வந்தடைந்திருக்கிறது. 16 மணி நேர விமானப் பயணத்துக்குப் பிறகு இந்திய அணி நாடு திரும்பியுள்ளது.
விளம்பரம்

பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் இந்திய அணியினர் சந்தித்தனர்.

பெரில் புயல் காரணமாக அணி பார்படாஸில் இருந்து புறப்பட முடியாமல் சிக்கியிருந்தது. புயல் காரணமாக பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
டி20 உலகக்கோப்பை பேரணி: மழையை பொருட்படுத்தாது இந்திய அணியை வரவேற்க காத்திருக்கும் ரசிகர்கள்

இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் இந்தியக் குழுவினர் டெல்லி வந்தடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் ஏற்கனவே குவிந்திருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து டெல்லியின் ஐடிசி மவுரியா ஹோட்டலுக்கு குழு சென்றடைந்தது. பின்னர் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்து கோப்பையைக் காண்பித்து மகிழ்ந்தனர்.

டி20 உலகக்கோப்பை பேரணி: மழையை பொருட்படுத்தாது இந்திய அணியை வரவேற்க காத்திருக்கும் ரசிகர்கள்

காணொளிக் குறிப்பு, மோதியைச் சந்தித்த இந்தியக் கிரிக்கெட் அணி

ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணி முதல் மும்பையில் உள்ள மரைன் டிரைவ் சாலை வழியாக வான்கடே மைதானம் வரை கோப்பையுடன் பேரணி நடக்கும் என்று கேப்டன் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

“இந்த சிறப்பான தருணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாட விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை வெற்றிப் பேரணியுடன் கொண்டாடுவோம்.

ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 29 அன்று, பார்படாஸில் நடந்த டி20 இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக