Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறுகின்றதா? நினைவேந்தல் நிகழ்வு குறித்து இனி அதிக கவனம் செலுத்தப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

,

நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது.

ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது.

தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன.

எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல.” – என்றார்.