எரிபொருள் பிரச்சினையின் உண்மை நிலை
எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய சூத்திரம் முந்தைய 3% கொடுப்பனவை விட அதிக கொடுப்பனவையே வழங்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை இரத்து செய்வதற்கும், புதிய சூத்திரம் மூலம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்தது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று (28) முதல் எரிபொருளை முன்பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்கு முடிவு செய்துள்ளதாகக் கூறியது.
இருப்பினும், இந்த முடிவு நாட்டில் எந்த எரிபொருள் நெருக்கடியையும் ஏற்படுத்தாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெறும் கொடுப்பனவை அதிகரிக்கும் அதன் தலைவர் ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"முதல் 15 லோடிங்கிற்கு 6.96 ரூபா கொடுக்கப்படும். அடுத்த 15 லோடிங்கிற்கு 6.62 ரூபாய வழங்கப்படும். இப்போது சுமார் 25 லோடிங்களை செய்பவர்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் தற்போது சுமார் 1 மில்லியன் ரூபாய் வருமானம் பெறுகின்றனர். அதில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்த பிறகு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்."
"நாம் அறிமுகப்படுத்தும் முறைமையின் ஊடாக , 25 லோடிங் செய்பவர்களுக்கு 6.69 ரூபா கிடைக்கும். "அப்போது அவர்களுக்கு 113,850 கிடைக்கும்." பழைய முறையை விட அதிகளவான வருமானமே இதில் கிடைக்கிறது" என்றார்.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.
நாட்டில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு .
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. de S. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.அத தெரணவிடம் பேசிய தலைவர், நாளைய தினத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு ஏற்கனவே விநியோகஸ்தர்களால் ஓர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.