பலதும் பத்தும்:- 05,03,2025 - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்புபோராட்டம்.
இந்தியப் பிரதமர் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம்.

O/L பரீட்சைக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைப்பு.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதிஅட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரதெரிவித்தார். இது தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியேற்பட்டால் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாகஒன்லைன் ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கான வசதியினை WWW.Doenets. LK என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக வழங்குமாறு அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற 474,147 பரீட்சார்த்திகள் தகுதிபெற்றுள்ளனர். பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
டெய்சி பொரெஸ்ட் கைது!
இன்று (05) காலை, பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு முன்னிலையானடெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘கதிரை’ சின்னத்தில் களமிறங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிஇணைந்து ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தனது கட்சி வேட்பாளர்களைத்தயாரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம்செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயமும்கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. ஆனால் விஜயம் குறித்த திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்புபோராட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகபிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில்ஈடுபட்டனர்.
சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்றவிண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால்எழுப்பபட்டன.
நாடாளாவியரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள்அந்தந்த பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.