Breaking News
அம்பாறை உழவு இயந்திர விபத்தில் காணாமல் போயிருந்த 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்பு
.
அம்பாறை - காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காணாமல் போயிருந்த 2 சிறுவர்கள் இன்று(27) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று(26) மாலை இடம்பெற்ற அனர்த்தத்தில் 6 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.
ஏனைய 4 சிறுவர்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிந்தவூர் மதரஸா பாடசாலையில் கல்விகற்று வந்த சிறுவர்கள் சிலர் நேற்று(26) பிற்பகல் வீட்டிற்கு பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனர்த்தம் இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் 14 பேர் பயணித்துள்ளனர்.
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் 5 சிறுவர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.