Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இங்கிலாந்து சட்டவாக்காளர்கள் மனித இறப்புக்கு உதவி செய்ய வழங்கிய வரலாற்று ஒப்புதல்

.

நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தீராத நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவான ஆயுட்காலத்தை கொண்ட முதியவர்கள், தங்கள் வாழ்நாளை முடித்துக்கொள்ள ஆதரவளிக்கும் வதையறா இறப்பு யோசனைக்கு ஆதரவாக இங்கிலாந்தின் (England) நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம் குறித்த இறப்புக்களை சட்டப்பூர்வமாக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்சுமார் ஐந்து மணிநேர தீவிரமான விவாதத்திற்குப் பின்னர், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் மல்க, Terminally Ill Adults (வாழ்க்கை முடிவு) யோசனையின் இரண்டாம் வாசிப்பின்போது வாக்களித்தனர்.

இதன்போது 330 ஆதரவாகவும், 275 எதிராகவும் வாக்களித்த நிலையில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த யோசனையின் விதிமுறைகளின்படி, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலத்தை மாத்திரமே கொண்ட ஒரு பெரியவர், இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர் தமது முடிவை அங்கீகரித்தால், தமது வாழ்நாளை முடித்துக்கொள்ள உதவி பெறலாம்.

இந்தநிலையில் குறித்த யோசனையை, சட்டமாக மாற்றுவதற்கு இன்னும் சில தடைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி பொது மற்றும் பிரபுக்கள் சபையில் ((The Commons and the House of Lords) ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாம் வாசிப்பின்போது நிபந்தனையுடனான ஆதரவை மட்டுமே வழங்கியுள்ளனர்.யோசனையின் மூன்றாம் வாசிப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் இல்லாவிட்டால், தாம் யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று அவர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர்.