வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
.
எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவினா் வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், குருநாகல், மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, மொனராகல, பதுளை, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், அனைத்து மாவட்டத்திலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
குறிப்பாக மத்திய மாகாணத்தில் 1421 வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலிடத்திலும், தொடர்ந்து 1005 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாசவும், 420 வாக்குகளுடன் அநுரகுமார திசாநாயக்க மூன்றாவது இடத்திலும், 70 வாக்குகளுடன் நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வடமாகாணத்தை பொறுத்தவரையில், 886 வாக்குகளைப் பெற்று ரணில் முதலிடத்திலும்இ 683 வாக்குகளை பெற்று சஜித் இரண்டாவது இடத்திலும், 298 வாக்குகளை பெற்று அநுரகுமார மூன்றாவது இடத்திலும், 46 வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ச நான்காவது இடத்திலும் உள்ளார்.
இருப்பினும்இ வடக்குக் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் பா.அரியநேந்திரன் இந்த பட்டியலில் உள்வாங்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.