Breaking News
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் – மூவர் பலி
.
ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.