Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டிஜிட்டல் மயப்படுத்தல் செயல்முறையை விரைவுபடுத்திய அமைச்சு

இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

அந்த அமைச்சின் உள்ளக சேவைகள் மற்றும் இராஜதந்திர சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

வெளிநாட்டுத் தூதுக்குழு சேவைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகித்தல், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் தூதரக சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான முறையான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளிகளுக்கு தகவல் மற்றும் சேவைகளுக்கான சிறந்த பிரவேசத்தை உறுதிசெய்து, பயனாளிகள் - நட்பு இணைய இடைவழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வலிறுத்தப்பட்டன. 

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகளை இலகுபடுத்தும் செயற்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. 

இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் பியசேன, தூதரக விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிர்மல பரணவிதான, மக்கள் இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் மேலதிக பொது முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) பீ.ஜீ.ஜீ.எஸ். யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.