Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மன்னாரில் இருந்து இருவா் தேசிய கால்பந்தாட்ட அணிக்கு தெரிவு

.

இலங்கையின்  16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
 மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வன் N.கெஸ்ரோன் , செல்வன் K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
 
குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4ம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள்  என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளன ர்.
இம் மாணவர்களது மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கான பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள்.
எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்