ஆளில்லா தீவுக்கு அமெரிக்கா வரிவிதிப்பு! ஆனாலும் இவ்வளவு கண்டிஷன் ஆகாதுங்க..
பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுக்கு வரி விதித்த டிரம்ப்!

ஒவ்வாரு நாடுகளுக்கும் பதிலடி வரியை (Reciprocal Tariffs) விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் வர்த்தக போர் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம், மனிதர்களே வசிக்காத வெறும் பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுக்கு அவர் வரி வித்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.
டிரம்பின் வரி பற்றி உலகமே அலறிக்கொண்டிருக்க, ஆள் இல்லாத தீவுக்கு இவர் வரி போட்டிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாக்களில் பயங்கர ட்ரோல் ஆகிக்கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் ஹர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் இருக்கின்றன. இந்த தீவில் மனிதர்கள் கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆய்வாளர்கள் சிலர் திரிந்துக்கொண்டிருப்பார்கள். சுற்றுலா பயணிகள் கூட இந்த தீவுக்கு வருவது கிடையாது. ஆனால் இந்த தீவில் உற்பத்தியாகி அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்த்த அங்குள்ள பென்குயின்களும், சீல்களும் (seal) 'am i joke to you' என கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் இந்த தீவில் எந்த தொழிற்சாலையும் இல்லை. எந்த பொருளும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது ஏன் 10% வரி அறிவிக்கப்பட்டிருக்கிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்கா தரப்பில், "அமெரிக்க பொருட்களுக்கு அந்த தீவு 10% வரியை அறிவித்திருக்கிறது. எனவேதான் நாங்களும் பதிலுக்கு வரியை அறிவித்திருக்கிறோம்" என்று அரிய விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தீவு கடந்த 1953ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு பனி அதிகம் என்பதால் மனிதர்களால் வசிக்க முடியாது. இந்த தீவு மட்டுமல்லாது வேறு சில நாடுகளுக்கும் அமெரிக்கா வரியை விதித்திருக்கிறது.
1. சீனா: 32% 2. தைவான்: 32% 3. ஐரோப்பிய ஒன்றியம்: 20% 4. இந்தியா: 26% 5. ஜப்பான்: 24% 6. வியட்நாம்: 46% 7. தாய்லாந்து: 26% 8. பிரிட்டன்: 10% ஆஸ்திரேலியாவின் சில பிரதேசங்கள்: ஹர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள்: 10% கிறிஸ்துமஸ் மற்றும் கோகோஸ் கீலிங் தீவுகள்: 10% நார்ஃபோக் தீவு: 29%
என வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரி விவகாரத்தை எளிமையாக புரிந்துக்கொள்ள சிறிய உதாரணத்தை பார்ப்போம். அதாவது, இந்தியாவில் மாம்பழம் பேமஸ். அமெரிக்காவில் ஆப்பிள் பேமஸ். அமெரிக்காவிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு நாம் 20% வரியை போடுகிறோம். ஏனெனில் இந்த வரியால் அமெரிக்கா பெரிய இழப்பை ஒன்றும் சந்தித்துவிடாது. நம்மூர் மாம்பழத்திற்கு நேற்றுவரை 5% வரியை விதித்த அமெரிக்கா தற்போது 20% வரியை போட்டிருக்கிறது. இது நமக்கு பெரிய அடினெனில் நாம் வளர்ந்து வரும் நாடு. மட்டுமல்லாது நம்மூர் பணத்தை விட, அமெரிக்க டாலருக்குதான் கிராக்கி அதிகம். அமெரிக்காவில்தான் பணக்காரர்கள் அதிகம். அமெரிக்காதான் பொருளாதாரத்தில் முதலில் இருக்கிறது. இப்படி எல்லாவற்றிலும் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவுக்கு சரிசமமாக நம்மிடம் வரியை வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இதனால் வர்த்தக போர்தான் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி அதெல்லாம் விடுங்க.. பென்குயின் தீவுக்கான வரியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கும், 'am i joke to you' என்றுதான் சொல்ல தோன்றுகிறதா?