Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

குறித்த பகுதியிலும் மனித எலும்பு சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும்

யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழியாக ஏற்கனவே ஒரு புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டு அங்கு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புதைகுழியில் இருந்து நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) வரையில் 56 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 50 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்நிலையில், செய்மதி படங்களின் அடிப்படையில் அருகிலுள்ள ஒரு பகுதியும் புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பகுதியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பபட்டுள்ளது.

குறித்த பகுதியிலும் மனித எலும்பு  சிதிலங்கள் சிக்கலான முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக அகழ்வு பணிகளின் பின்னரே அவை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.